Wednesday, April 25, 2007

அப்பா...

கண்கள் முன் வெள்ளை நிறம் வரும்
அப்பாவை நினைத்தால்
உடை, தலைமுடி, மனம்
கூடவே சிரிப்பும் வெள்ளையாய்.

அருகே வரசொல்லி
அமரசெய்து தலை கோதிவிடும்போது
அன்பு நிறைந்து இருக்கும்
பல நாட்கள் தூங்கிபோய்
இருக்கிறேன் அப்படியே.

சிறு வயதில் தூங்காமல் கறையும் இரவு
வியாபாரத்திற்க்கு சென்ற அப்பா
கொண்டுவரும் வரும்
உசிலம்பட்டி மிக்சருக்கும்
ஒத்தவீடு காரசேவுக்கும்,
அதிகாலை மூன்று மணிக்கு வந்து
திண்னையில் அமர்ந்து
பேசிகொண்டு இருப்பார் அண்னனோடு
பக்கத்தில் பொட்டலமாய் இருக்கும்
மிக்சரும் சேவும்
பார்த்தவுடன் வரும் தூக்கம்
பகல்தாண்டியும் தொடரும்।

வட்டமாக அமர்ந்து
கறிசோரு சாப்பிடும்போது
அப்பாவின் தட்டிலிருக்கும் பாதி கறி
இடமாறி இருக்கும் எங்களின் தட்டுக்கு
அம்மா போட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில்.

மகன் காதலிக்கிறான்
கூடபடிக்கும் பெண்னை
என்றவுடன் கஷ்டப்பட்டராம்
அம்மா சொன்னவுடன்.

நேரில் சொன்றபோது
சந்தோஷம் என்றார்,
கல்யாணம் முடிந்தவுடன்
நல்லா வரனுமுடா
எல்லார் முன்னாடியும்,
ஆயிரம் அர்த்தங்கல்
ஒற்றை வாக்கியித்தில்.

கடைசி நாளன்று
மரணபடுக்கையில்
அம்மாவிடம் சொன்னாராம்
அவன வரசொல்லுன்னு.

வேலைக்கு வெளியூர் சென்றதால்
காலையில் வந்துடுவான்னு
படுக்கசென்ற அப்பா எளுந்துக்கவே இல்ல.

நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்....

தமிழ்மணத்திற்க்கு.....

வணக்கம்,

நான் கடந்த ஆறு மாதகாலமாக தமிழ்மணம் வாயிலாக வலைபதிவுகலை படித்து வருகிறேன்.

தமிழ்மணம் எனக்கு மிகவும் பிடித்த வலைதிரட்டி, அதனோடு இனைந்துகொள்ள மிகவும் ஆவலாய் உள்ளேன்.


அன்புடன்,

தம்பி.

வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம்,
இந்த வலைபதிவுலகத்திற்க்கு நான் மிகவும் புதியவன்.
ஆர்வமிகுதியில் ஆரம்பித்து விட்டேன்.
ஆரம்பத்தில் சிறு சிறு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
தவறுகளை போக போக திருத்திகொள்கிறேன்.

வாழ்த்துங்கள் இந்த தம்பியை.

அன்புடன்
தம்பி.